இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில், 3,684 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 2,789 பேருக்கு கொரோனா இல்லை. 411 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 484 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இன்று மட்டும் 102 பேருக்கு மட்டும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது