மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்த 101 வயது மூதாட்டி குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஸ்பெயினிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. ஸ்பெயினில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 10,935 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களில் 95 சதவீதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்த 101 வயது மூதாட்டி, அதிலிருந்து குணமடைந்து அனைவரின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
கொரோனாவை வென்று நம்பிக்கை நட்சத்திரமான 101 வயது பாட்டி