குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, 'திப்பு சுல்தான் யுனைடெட் பிரண்ட்' என்ற அமைப்பு, பெங்களூரு
சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க பாகிஸ்தான் வாழ்க என்று இளம்பெண் மேடையில் கத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தலைமையில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திடீரென மேடை ஏறிய இளம்பெண் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என மைக்கை பிடித்து முழக்கமிட துவங்கினார். 
அப்போது மேடையில் இருந்த ஓவைசி உள்ளிட்ட சிலர் விரைந்து வந்து அந்த பெண்ணை தடுத்தனர். அவரிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தும், அப்பெண் பிடிவாதமாக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தொடர்ந்து முழுங்கிவந்தார். இதனையடுத்து அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவர் மீது பிரிவு 124ஏ கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் எங்கள் அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று ஓவைசி மறுத்துவிட்டார். இருப்பினும் அமைப்பில் இல்லாத பெண்ணை மேடையில் ஏறி பேச ஏன் அனுமதிக்க வேண்டும், சிஏஏ எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கூட்டங்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, பெங்களூருவில் நடந்த பேரணியில், மேடை ஏறி, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, முழக்கமிட்ட, இளம் பெண் அமுல்யாவின் தந்தை, தனது மகளின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, 'திப்பு சுல்தான் யுனைடெட் பிரண்ட்' என்ற அமைப்பு, பெங்களூரு சுதந்திர பூங்கா அருகில் நேற்று மாலை போராட்டம் நடத்தியது. கூட்டம் துவங்கிய உடன், இளம்பெண் ஒருவர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, தொடர்ந்து மூன்று முறை கோஷமெழுப்பினார். கூட்டத்தில் கலந்து கொண்ட, ஐதராபாத் லோக்சபா தொகுதி எம்.பி.,யான அசதுத்தீன் ஒவைசியும், போலீசாரும், அந்தப் பெண்ணிடமிருந்த மைக்கை பிடுங்கி, பேச்சை நிறுத்தும்படி கூறினர். பின், போலீசார், அப்பெண்ணை, உப்பார்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.